


சென்னையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை சந்தித்து தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் திமுக முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் தென்காசி மாவட்டத்திற்கு தனியாக ஆவின் கூட்டுறவு பால் ஒன்றியம் அமைத்திட வேண்டும் கூறப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கடையம் ஜெயக்குமார், சமுத்திரபாண்டியன் ஒன்றிய கழக செயலாளர்கள் செல்லத்துரை, மாரிவண்ணமுத்து, இரா. குமார், வெற்றி, விஜயன், அன்பழகன், க.சீனித்து அழகுசுந்தரம், கடற்கரை கிறிஸ்டோபர், சேர்மத்துரை உள்ளிட்டவர்களும் பேரூர்இகழக செயலாளர் லட்சுமணன், மாவட்ட இளைஞரணி சரவணன், சிறுபான்மை அணி சேக் முகம்மது மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் முருகன் ராஜா மாரியப்பன் செந்தில் தினகரன் தகவல் தொழில்நுட்ப அணி பெரியதுரைஅழகுதுரை தமிழ்செல்வன் . இசக்கிப் பாண்டியன் வீமராஜ் வீராணம் பாலு மணி மூர்த்தி சுரேஷ்கண்ணா உள்ளிட்டகழக நிர்வாகிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மனுவைபெற்றுக்கொண்ட அமைச்சர் தென்காசிக்கு தனியாக ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியம் அமைவது சம்பந்தமாக திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதை தெரிவித்தார்.
மாவட்ட கழகம் சார்பில் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்தனர்.
ரை

