• Wed. Dec 11th, 2024

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் : ஆட்சியர் திறந்து வைத்தார்…

Byadmin

Jul 16, 2021

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  கலந்துகொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்முன்னிலையில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இன்று புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விற்கப்படும் மீன்களுக்கு நல்ல மரியாதை உள்ளது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்கள் சென்னை, பெங்களுர் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்திட ரூ.40 கோடி மதிப்பிட்டில் தூண்டில் வளைவு நீட்டிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தினை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இங்கு மீன்களை வைத்து பாதுகாத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வகையில் கோல்டு ஸ்டோரேஜ் கட்டப்பட உள்ளது. தற்போது புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணித்து மீனவர்கள் மற்றும் இங்கும் அனைவருக்கும் மிகவும் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி ஒருங்கிணைந்த அனைத்து விசைப்படகுகள் சங்க தலைவர் சேவியர்வாஸ், வட்டக்காரர் சங்க தலைவர் பிரவின், மீன்வளத்துறை துணை இயக்குநர்கள் வயலா, விஜயராகவன், மீன்துறை ஆய்வாளர் பொன்சரவணன் மற்றும் அலுவலர்கள், மீனவர்கள், பல்வேறு மீனவர் சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர்.