தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளான இன்று தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் முன்பு உள்ள காமராஜரின் திருவுருவச்சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாவட்டக் கழக துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் முன்னாள் வாரிய தலைவர் அமிர்தகணேசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக். ராஜா, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் நடராஜன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.தனராஜ், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மாநகரப் பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திமுக
திமுக சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கஸ்தூரி தங்கம், மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டுராஜா, கீதாமுருகேசன், சுரேஷ்குமார், பாலசுப்பிரமணியன், பாலகுருசாமி, நிர்வாகிகள் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், ஆர்தர்மச்சாது, கிறிஸ்டோபர் விஜயராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் காங்கிரஸ்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பெருமாள் சாமி தலைமையில் வஉசி மார்கெட் முன்பு அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இதில், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் இக்னேஷ்யஸ், ஐஎன்டியூசி தலைவர் வீரையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, மாநில பேச்சாளர் அம்பிகாபதி, மற்றும் நிர்வாகிகள் ஏஜே அருள் வளன், ராஜசேகர், ஜெய மணி, நாராயணசாமி, நம்பி சங்கர், சிவாமூர்த்தி, மேகி, ஜெனிட்டா, பெத்து ராஜ், சேவியர் மிசியர், வீரன், ராஜீவ் காந்தி, முருக பெருமாள், பிரசாந்த் குமார், செல்லத்தாய், ஜெனிட்டா, ராமர், முத்து, ரமேஷ் சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய காமராஜர் மக்கள் கழகம்
அகில இந்திய காமராஜர் மக்கள் கழகத் தலைவர் பி விஜயகுமார் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க்பபட்டது. இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராமசாமி நாடார், மாரியப்பன், முருகன், சந்திரசேகர், ராஜா, சேகர், மகமை ராஜா, அரிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கழகம்
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில வர்த்தகரணி துணை செயலாளர் ரவிசேகர், மாநில கலை இலைக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை ஆகியோர் தூத்துக்குடியில் காய்கனி மார்க்கெட், பழைய மாநகராட்சி அலுவலகம், வஉசி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள காமராஜர் சிலைகளுக்கும் மாலை மாவட்ட அலுவலகத்தில் காமராஜர் உருவபடத்திற்கும் அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைதலைவர் கண்டிவேல், மாவட்ட துணை செயலாளர் அருள்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், பிரதிநிதிகள் வின்சென்ட், பழனிவேல், பெரியசாமி தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம் தொழிலாளரணி செயலாளர் சதாசிவம் விவசாய அணி செயலாளர் சரவணன் மகளிரணி செயலாளர் குருவம்மாள் மாநகர செயலாளர் உதயசூரியன் இளைஞரணி துணை செயலாளர் முத்துக்குமார், தொழிலாளரணி துணை செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் சந்தணக்குமார், மதியழகன், பொண்மணி, ஜேசுசெல்வி, முத்துலெட்சுமி, பத்மா, சந்தணராஜ், பார்த்திபன், சந்தணக்குமார், முருகேசன், தேவேந்திரன்,கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதச்சார்பற்ற ஜனதாதளம்
மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் மாவட்ட தலைவர் என்.வி.ராஜேந்திரபூபதி தலைமையில், மாநகராட்சி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலை மற்றும் வஉசி சந்தையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாநில துணைத்தலைவர் எம்.சொக்கலிங்கம் மாலை அணிவித்தார். மேலும், பங்களா தெருவிலுள்ள காமராஜ் நினைவு பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து சிவந்தாகுளம் சந்திப்பில் வைக்கப்பட்டு இருந்த காமராஜர் படத்திற்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் ஆர்.செல்வராஜ், மாநகர செயலாளர் எம்.கோமதிநாயகம், துணை தலைவர் வி.ராஜபெருமாள், துணை செயலாளர் ராஜேந்திரன், மீனவர் பிரிவு தலைவர் வின்சென்ட், வட்டார செயலாளர் ரஜினிமுகமது உள்பட பலர் கலந்துகொண்டு கொண்டனர்.
பாஜக
பாஜக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் தலைமையில் வஉசி மார்க்கெட் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், மண்டல தலைவர்கள் கனகராஜ், முத்துகிருஷ்ணன், சந்தனகுமார், பொதுச் செயலாளர் முத்துபெரியநாயகம், நிர்வாகிகள் மான்சிங், சின்னத்தங்கம், டாக்டர் அரவிந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய வியாபாரிகள் சங்கம்
தூத்துக்குடி வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் அன்புராஜ், செயல் தலைவர் சந்தனராஜ் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சங்க செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் மரகதராஜ், நிர்வாகிகள் முத்துபாலகிருஷ்ணன், ஜோசப், ஜேம்ஸ் துரைராஜ், இளையராஜா, இசக்கி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மீனவர் கூட்டமைப்பு
தூத்துக்குடி மாவட்ட அனைத்து மீனவர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் அனிஸ்ட்டன், பொருளாளர் அனில், துணைத் தலைவர் ராஜபாண்டி, துணைச் செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாிககள் மாலை அணிவித்தனர்.
அமமுக
தூத்துக்குடி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் மாநகர் செயலாளர் பிரைட்டர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முக குமாரி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், நிர்வாகிகள் ராமலட்சுமி, தங்கமாரியப்பபன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.