தஞ்சாவூர் முன்னாள் எம்.பி., பரசுராமன். அ.தி.மு.க., தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலராக உள்ளார். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தார். கடந்த 2014ம் ஆண்டு தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், வைத்திலிங்கம் சிபாரிசில் சீட் வாங்கி, பரசுராமன் ஜெயித்தார்.
வைத்திலிங்கத்தின் பினாமி என கூறும் அளவிற்கு செல்வாக்கு மிக்க நபராக மாறினார். காலப்போக்கில் இருவருக்கும் நெருக்கம் குறைந்தது. இந்நிலையில், பரசுராமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் ஸ்டாலினை புகழந்த வீடியோ ஒன்று வெளியானது.
இந்நிலையில், தி.மு.க., மாவட்ட அலுவலகத்திற்கு தனது ஆதரவாளருடன் வந்த பரசுராமன், தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்.எல்.ஏ.,வான சந்திரசேரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசந்திரன் ஆகியோரை சந்தித்து, தி.மு.க.,வில் இணைவதற்காக, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலினிடம், கேட்டு விட்டு, பதில் அளிப்பதாக கூறி, பரசுராமனை, சந்திரசேகரன் அனுப்பி வைத்தார்.