


திருப்பத்தூர் ஜூலை 21, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இஸ்லாமியர்களிளின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அச்சுக்கட்டு பகுதியில் உள்ள குத்பா திடலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இந்த திடலில் தொழுகை நடத்தாமல் இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதனையொட்டி திருப்பத்தூர் பெரிய பள்ளிவாசலில் காலை நேரக் கூட்டுத் தொழுகைகள் நடைபெற, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி
முகமது பாரூக் ஆலிம் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையை நடத்தினார். அப்போது இந்தப் பெரும் தொற்று நோயிலிருந்து உலகத்தை காத்தருள வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டனர். இதில் ஏராளமான இசுலாாமியர்கள் பங்கேற்றனர்.

இதே போன்று இங்குள்ள 10 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழுகை நடத்த, வசதி செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் ஒரே இடத்தில் அமர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளாத சூழ்நிலையைக் கண்டு இசுலாமியர்கள் வேதனை அடைந்தனர்.

