

தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர் திண்டிவனம் ராமமூர்த்தி. அவருக்கு வயது 87. உடல்நலக்குறைவு காரணமாக காலமான அவரது உடல் அவரது இல்லம் உள்ள சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
1934ம் ஆண்டு பிறந்த இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராக பணியாற்றி உள்ளார். 2 முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 1981 முதல் 84ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக செயலாற்றி உள்ளார். 1984 முதல் 90 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக செயலாற்றி உள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழ்நாடு மாநில தேசிய காங்கிரஸ் என்ற புதிய கட்சியை துவங்கினார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச்சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்தார். பின்னர் தனது கட்சியைக் கலைத்துவிட்டு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் ராமமூர்த்தி தலைமையிலான கமிட்டியை சரத்பவார் கலைத்தார். தமிழகத்தின் மூத்த அரசியல் வாதியான திண்டிவனம் ராமமூர்த்தியின் மறைவு காங்கிரஸ் ஈடுபாடு உள்ளவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

