உலகின் மூத்தகுடி தமிழ்குடி கல் தோன்றி மண் தோன்ற முன்தோன்றிய தமிழ்குடி என்ற முதுமொழியை மெய்ப்பிக்கும் வகையில் சிவகங்கை அருகே கீழடியில் அகழாய்வு செய்ததில் உலகையே அதிர வைக்கும் தமிழ் சமூகத்தின் தொன்மங்கள் கிடைத்தன. தொல்லியல் துறையில் மூத்த குடி தான் தமிழ் குடி என்றால் ஏற்றுக்கொள்ள ஆதாரங்களை கேட்கும் ஒன்றிய தொல்லியல் துறைக்கு செவிட்டில் அறைந்தால் போல கிடைத்த இந்த ஆதாரங்களை வெளிக்கொணர்ந்த அமர்நாத் ராமகிருட்டிணனை அசாமுக்கு தூக்கி வீசியது. இதுவரை அகழாய்ந்த இடங்களில் எல்லாம் எலும்புக்கூடுகள் கிடைத்தன. ஆனால் இந்தியாவில் முதன் முதலாக நகர நாகரீகத்தை அதுவும் வைகை நதிக்கரை நாகரீகத்தை உலகின் கண்களுக்கு முன்னிறுத்தியது கீழடி. இது திராவிட இனத்தின் தலை மகளான தமிழ் குடியின் வசிப்பிடம். வெறுமனே சங்க இலக்கிய தகவல் மட்டுமல்ல உனக்கான அறிவியல் சான்றுகள் இதோ என்று ஆதாரங்களை காட்டிய நிலையில் தாமிரபரணி நதிக்கரையில் இன்னொரு கீழடி போல கொற்கை அகழாய்வு நடைபெற்று வருகிறது. கொற்கை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் துறைமுக நகரம் ஆகும். சில ஊடகங்கள் ஏன்று நாம் கீழடியை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம் கொற்கையை பற்றி பேசுவோம்போற்றுவோம் என்கின்றன. கீழடியும் தான் முற்கால மதுரை என கூறப்படுகிறது. கொற்கையும் மதுரை பாண்டியர்களின் ஆழுகைக்கு உட்பட்டது தான். இதில் வேற்றுமை பாராட்ட வேண்டியதில்லை.
கொற்கை. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பகுதியில் அமைந்த ஒரு துறைமுக நகரமாகும். ஆதிச்சநல்லூர் இதே பகுதியில் உள்ள இன்னொரு அகழாய்வு இடமாகும். இங்கு அதிக அளவிலான முதுமக்கள் தாழி கிடைக்கின்றன. இது ஒரு புதைகாடாக இருக்கிறது. இதே போல தமிழ்நாட்டில் பல இடங்களில் அகழாய்வு நடைபெற்றது. ஆனால் கீழடி அகழாய்வு ஒரு நகர நாகரீகத்தை அங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றை அகழ்நது கொண்டிருக்கிறது என்பதே மிக முக்கியமமானது. அப்படி ஒரு நகர நாகரீகமாக அதுவும் துறைமுக நகரத்தை நமது அரசு அகழாய்வு நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 52 ஆண்டுகள் கழித்து மீண்டும் இங்கு அகழாய்வு நடைபெறுகிறது.
நமது சங்க காலம் முதலே கொற்கை நகரம் பிரபலமாக உள்ளது. இந்த துறை முகம் முத்துக்குளிக்கும் இடமாக விளங்கியதாகவும் ரோமானியர்கள் இங்கு வியாபாரம் செய்ய வந்ததாகவும் கணிக்கப்படுகிறது. பாண்டிய மன்னனான வழுதி என்பவரது ஆட்சிக்குட்பட்ட நகரமாக கொற்கை விளங்கியது. இவரது ஆட்சியில் ரோமானியர்கள் இங்கு காவல் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ரோமப் பேரரசின் மன்னரான அகஸ்டஸ்சீசர் தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்தாக ரோமில் உள்ள கல்வெட்டு குறிப்பு உள்ளது. அதில் கொற்கை என்பதற்கு பதில் கொள்கை என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. தாலமி என்ற வரலாற்று அறிஞர் தனது குறிப்புகளில் கொற்கையைப் பற்றி குறிப்பிடும் போது கரியாய் என்று குறி;ப்பிட்டுள்ளார். கரியாய் என்றால் கரையர்கள் அதாவது கரையில் வாழ்பவர்கள் என்று அர்த்தம். ரோமர்களின் நாணயங்களின் இங்குஉள்ள அக்காசாலை என்ற இடத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி வட்டார பகுதியில் நாட்டுப்புறப்பாடல்களில் இந்த கொற்கை புகழ் பாடும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே இங்கு செயல்பட்ட அருங்காட்சியகத்தை திருநெல்வேலிக்கு அரசு மாற்றியுள்ளது. கொற்கையில் கிடைக்கும் பொருட்களை இங்கேயே காட்சிப்படுத்த அரசு அருங்காட்சியகத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்பது கோரிக்கையாகும்.