அமைச்சர் கே.என்.நேரு சொன்ன விளக்கம்..!
தமிழ்நாட்டில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் விரைவில் உருவாக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஏற்கனவே பதினைந்து மாநகராட்சிகளும்,150 மாநகராட்சிகளும் மூன்றாம் நிலை வரை நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கப்பட்டுள்ளது. இதே போல தற்போது நிர்வாக வசதிக்காக தாம்பரம், கடலூர், கும்பகோணம், கரூர், நாமக்கல் ஆகியவை மாநகராட்சிகள் ஆகவும், வடலூர், திருச்செந்தூர், அவினாசி, குன்றத்தூர், கோத்தகிரி, தாரமங்கலம், திருக்கோவிலூர் ஆகியவை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.