மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தடுப்பூசி முகாமை பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார், அதனைத் தொடர்ந்து இல்லை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் குரானா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் உடன் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பங்கேற்றனர், மற்றும் யானைமலை ஒத்தக்கடை ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் மற்றும் ரகுபதி ஆகியோர் பங்கேற்றனர் மேலும் பேருந்து நிலையத்திற்கு வந்த பொதுமக்களுக்கு தடுப்பூசி இணையம் செய்யப்பட்டது.மேலும் விழிப்புணர்வு குறித்த குறும்படமும் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது,
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசும்போது,
தமிழகம் முழுவதும் ஆடி 18 பெருக்கின் போது பொதுமக்கள் அதிகம் கூட்டம் கூட வாய்ப்பு உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது, நேற்றைய தினம் முக்கிய கோவிலுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, மதுரை மாவட்டத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளது ஒன்றிய அரசிடமிருந்து பெற்று தடுப்பூசி மக்களுக்கு தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது,ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விரைந்து முஞிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது,ஒப்பந்ததாரர்கள் பணியை விரைந்து முடிக்க துரிதப் படுத்தப் பட்டுள்ளனர்,கொரோனா பேரிடர் காலம் என்பதால் பணிகளை முடிப்பதில் ஓரிரு மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது,வெகு விரைவில் பணிகள் முடிக்கப்படும்,ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மட்டும் இல்லாமல் அனைத்து துறையிலும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பேசினார்.