

ஜெயங்கொண்டம் அருகே நாச்சியார் பேட்டையில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாச்சியார் பேட்டையை சேர்ந்தவர் ரத்தினம். இவர் தனது நிலத்தில் சாகுபடி செய்துள்ள முருங்கை பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஜூலை 19ஆம் தேதி அன்று இன்று சென்றுள்ளார்.
அப்போது அருகில் உள்ள வயலின் வழியாகச் சென்றபோது, அங்கு
மின் மோட்டாருக்கு வரக்கூடிய மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளதை கவனிக்காமல் சென்ற ரத்தினம் எதிர்பாராதவிதமாக மின்கம்பியை மிதித்ததாக கூறப்படுகிறது. அப்போது அதிலிருந்து மின்சாரம் தாக்கி ரத்தினம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் வயலுக்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததை அடுத்து சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் வயதுக்கு வந்த போது அவர் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுபற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

