கோவை ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ராமநாதபுரம் வரை செல்லும் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தகவல்.
கோவை. ஜூலை. 15- கோவை ராமேஸ்வரம் சிறப்புரையில் ராமநாதபுரம் வரை இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை ராமநாதபுரம் ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி கோவை ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் எண் (66618), மேற்கண்ட நாள்களில் கோவை ராமநாதபுரம் இடையில் மட்டுமே இயக்கப்படும். அதேபோல் ராமேஸ்வரம் கோவை வாராந்திர சிறப்பு ரயில் எண் (66617) வருகிற 21-ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ராமேஸ்வரம் ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அந்த நாட்களில் ராமநாதபுரம் கோவை இடையே மட்டும் இந்த ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.