

அரியலூர் மாவட்டம், வட்ட அரசு மருத்துவமனைகளான ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறையில் கொரொனா நோய்த்தடுப்பு பணிகளுக்காக அரசாணையின்படி பகிர்ந்தளிக்கப்பட்ட மருந்தாளுநர்கள்/ ஆய்வக நுட்புநர்கள் நிலை-2 மற்றும் நுண்கதிராளர்கள் என தலா 4 பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியுடைய நபர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்துடன் அரசு அங்கீகாரம் பெற்ற பட்டயப்படிப்பு மற்றும் பதிவு பெற்றதற்கான சான்றிதழ், கல்விச்சான்றிதழ்கள்,அனுபவச்சான்றிதழ்கள் மற்றும் சாதிச்சான்றுகளுடன் நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை வளாகம், துறையூர் சாலை, பெரம்பலூர் – 621 212 என்ற முகவரியில் தபால் மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ தங்களுடைய விண்ணப்பங்களை 26.07.2021 பிற்பகல் :05.00 மணிக்குள் அனுப்பி வைத்திட வேண்டும்.
மேலும், மேற்கண்ட பதிவிகளுக்கான நேர்காணல் 30.07.2021 முற்பகல் காலை 9.00 மணி முதல் நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை வளாகம், துறையூர் சாலை, பெரம்பலூர் என்ற முகவரியில் நடைபெறும். இந்த பணியிடங்கள் பணிவரன் முறை செய்யப்படவோ, நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது.
அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்கள்.
