• Fri. Apr 18th, 2025

சிவாலயங்களில் பிரதோஷ விழா…

Byadmin

Jul 22, 2021

சிவ வழிபாட்டில் மிகவும் சிறப்புவாய்ந்த வழிபாடாக பிரதோஷ விழாவை பக்தர்கள் கருதுகின்றனர்.அதன்படி அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு சிவாலயங்களில் ஜூலை 21 ஆம் தேதி இன்று பிரதோஷ விழா மாலை நடைபெற்றது.
தா.பழூர் ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோவில் நடைபெற்ற பிரதோஷ விழாவில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பிரதோஷ நாயகரான நந்தியம் பெருமானுக்கு பால் தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பண்ணிரு திருமுறை, சிவபுராணம் பதிகங்கள் பாடப்பெற்று, சுவாமி வீதி உலா வந்தது. முடிவில் மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கோவில்கள் குருக்கள் செந்தில் செய்திருந்தார்.