• Tue. Apr 23rd, 2024

சிவகாசியில் 14 கொத்தடிமைகள் மீட்பு…..

Byadmin

Jul 23, 2021

திருமதி பழனிச்சாமி என்றொரு திரைப்படம் சத்யராஜ் சுகன்யா ஆகியோர் நடித்திருப்பார்கள் இந்த திரைப்படத்தில் சிவகாசி தொழிலில் ஒரு கிராமத்தையே கொத்தடிமையாக வைத்திருப்பார்கள் படம் வந்த காலத்தில் இப்படி எல்லாம் இருக்குமா என்றெல்லாம் கேலி செய்தார்கள் இருந்தது இருக்கிறது இருக்கும் என்பதற்கு அடையாளமாக இப்போது சிவகாசியில் 3 பெண்கள் உட்பட 14 கொத்தடிமைகள் மீட்கப்பட்டுள்ளார்.

சிவகாசியில் குழந்தைத் தொழிலாளர்களை கொத்தடிமைகளாய வைத்திருந்த நிறுவனங்களுக்கு எதிராக சாய்நாத் என்ற ஹிந்து பத்திரிக்கையின் ஆசிரியர் தொடர் செய்திகளை வெளியிட்டு தமிழக அரசை மீட்கும் பணியில் ஈடுபடுத்தினார் அதன் பிறகு குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்த தடைவிதிக்கப்பட்டது பொதுவாக அனைத்து மாவட்டங்களிலும் கொத்தடிமையாக வேலை செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் புகார் வந்தால் மட்டுமே அரசு செயல்படுகிறது.

சமீபத்தில் சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் தனபால் இவர் பாலித்தீன் பை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பணிபுரிய வட மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் மூலமாக தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தியுள்ளார்
இந்நிலையில் நவீன் என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொழிலாளர்களுக்கு ஊதியம் எதுவும் வழங்காமல் இருந்ததாகவும் மேலும் இதுகுறித்து வெளியில் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இவர்களது நிலை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

ஆட்சியர் உத்தரவின் பேரில் சார் ஆட்சியர் தலைமையில் பாலித்தின் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நிறுவன உரிமையாளர் ஊதியம் வழங்கியதும் ஊதியத்தை அவர்களிடம் கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது. கொத்தடிமைகளாகவும் குழந்தைத் தொழிலாளர்களாகவும் பணிபுரிந்த பீகார் மற்றும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 14 முதல் 20 வயது வரை கொண்ட 3 பெண்கள் உட்பட 14 பேரை மீட்டு அரசு குழந்தைகள் பாதுகாப்பு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சார் ஆட்சியர் தெரிவித்தார். இவர்களை கொத்தடிமைகளாக நடத்திய நவீன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *