

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்படட ஒரு கிராமத்தில் 5 வயது சிறுமிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த சில மாதங்களாக பல முறை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் திண்ணையில் அமர்ந்திருந்த சிறுமிக்கு அந்த சிறுவன் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தாக அப்பகுதியில் உள்ளவர்கள் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து கீழப்பழுர் போலீசில் பெற்றோர் கொடுத்த புகாரையடுத்து சிறுவன் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிபதி முன் ஆஜர் செய்து திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் சேர்ந்தனர்.
