• Mon. Dec 11th, 2023

சமூக அமைப்புகள் முன்னெடுத்த தடுப்பூசி முகாம்!

Byadmin

Jul 20, 2021

தூத்துக்குடியில் சமூக அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் திரளான மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இந்தியாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முதல் கட்டமாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன் பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முதலில் இதை முன்களப் பணியாளர்களுக்கும், அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 முதல் 59 வயது உள்ளவர்களுக்கும், பின்னர் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கும் என தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் தடுப்பூசி பற்றிய அச்சத்தால் பொதுமக்கள் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் கட்டவில்லை.

ஆனால் கரோனா 2-ம் அலையால் தற்போது ஏற்பட்ட பாதிப்பாலும், அதிகமாக ஏற்பட்ட உயிரிழப்பும் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போடும் மையங்களை தேடி படையெடுக்கத் தொடங்கினார்கள். இதனால் திடீரென தடுப்பூசிக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டும் வருகிறது.

இதில் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வரும் மன உளைச்சலை மனதில் கொண்டு ஆங்காங்கே பல சமூக அமைப்புகள் தடுப்பூசி முகாமை நடத்திட அனுமதிக்கோரி நடத்தியும் வருகின்றனர். திரேஸ்புரம் ஆரம்ப சுகாதார மைய தலைமை மருத்துவர் சூர்யா கேட்டுக் கொண்டதற்கிணங்க தூத்துக்குடி இளையவேந்தன் இரத்ததான அறக்கட்டளையும், மன்னா திருச்சபையும் இனைந்து பூபாலராயர்புரம் பகுதியை மையபடுத்தி தடுப்பூசி முகாம் ஒன்றை நடத்திட ஒப்புதலை பெற்றது.

இதன்படி வி.கேன் டிரஸ்ட் அமைப்பாளர் கிறிஸ்டோபர் முன்னிலையில் நேற்றைய (ஜூலை 19) தினம் நடத்தப்பட்ட இம்முகாமை மன்னா திருச்சபையின் பாஸ்டர் அமலதாஸ் தலைமையேற்று தொடங்கி வைத்தார். பொதுமக்களிடையே எழுந்துள்ள அச்சத்தை போக்கிட மருத்துவர் சூர்யா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு கலந்த கருத்துக்களை வெளிபடுத்தி கொண்டார். இதனால் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். வந்தவர்களிடம் செவிலியர்கள் கரோனா 3ம் கட்ட அலையின் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

இம்முகாமில் மன்னா திருச்சபை யை சேர்ந்த பாலமுருகன், ரூபன், தர்மராஜ், காட்ஷன், ஜெர்வின் மற்றும் பரதர் நல சங்க செயலாளர் கணகராஜ், திமுக பிரமுகர்கள் சேகர், நேவிஸ், முன்னாள் அதிமுக கவுன்சிலர் செண்பகச்செல்வன், வி.சி.க தொகுதி செயலாளர் ராமு (எ) ராமச்சந்திரன், நாம் தமிழர் சத்திய பிரபு, அஜித் மன்றம் மணிமாறன், எவலியன் கேபிள் டிவி ஆப்பரேட்டர் விக்டர், இளையவேந்தன் இரத்ததான அறக்கட்டளை சேக் முகமது, அந்தோணி, மரக்கடை சுப்பிரமணியன், கேபிள் டிவி யோவான், ரூபன், டான் இசக்கி, டைல்ஸ் சேக், மதன் செல்வகுமார், கிளாடுவின், ஆட்டோ முத்தரசன், எலக்ட்ரிசன் மணி, டாஸ்மார்க் செல்வம், ஆரோக்கியராஜ், எஞ்சின் ராஜேஷ், மெஜீ, முகமது நூர்தீன், ஜெய்லாப்தீன், கணிராஜ், நிஜாம், கிருஷ்ணன், பாலு, காவல் சுரேஷ், கிங்சிலின் உள்ப்பட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அனிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி தடுப்பூசி போட்டுக் கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *