பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள அனைத்து குடோன்களும் நிரம்பி விட்டதால், பருத்தி மூட்டைகளுடன் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்களில் காத்திருக்கும் விவசாயிகள். மேலும் குடோன்களில் இடம் இல்லாததால் வெட்டவெளியில் பருத்தி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், திருக்கருக்காவூர், இரும்புத்தலை, ஆவூர் ,வலங்கைமான், பட்டீஸ்வரம்,தேனாம்படுகை,சாலியமங்கலம் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த பருத்திகளை பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனைக்காக குவிந்து வருகின்றனர். இந்நிலையில் குடோன்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதால் குடோன்களுக்கு செல்லும் கதவு மூடப்பட்டு கதவில் குடோனில் இடமில்லை என எழுதி ஒட்டப்பட்டுள்ளது. ஆனாலும் வாடகை வாகனங்களில் பருத்தி மூட்டைகளை கொண்டுவந்த விவசாயிகள் திரும்ப எடுத்துச் செல்லாமல் பருத்தி மூட்டைகளுடன் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் காத்துக் கிடக்கின்றனர். மேலும் குடோனில் வெட்டவெளியில் அடுக்கி வைத்துவிட்டு மழை வந்து விடுமோ என்ற கவலையில் இருந்து கிடக்கின்றனர்.
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கூடுதல் குடோன்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நிதி ஒதுக்கப் படாததால் அவைகிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே கூடுதல் குடோன்களை கட்டி பருத்தி மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.