
சேலம் மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 4 பொறியாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ஏற்கனவே கான்கிரிட் வீடு உள்ளவர்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 14 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சேலம் மாவட்ட குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ரவிக்குமார் உதவி செயற் பொறியாளர் ஜெயந்திமாலா உதவி பொறியாளர் சரவணன் சீனிவாசன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
