• Fri. Mar 29th, 2024

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து அணை கட்டக் கூடாது என வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கியது.

Byadmin

Aug 5, 2021

தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிட வேண்டும், தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்து விரைந்து நிறைவேற்ற வேண்டும், அதேபோல் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து முடித்திட தமிழக அரசை நடவடிக்கை எடுக்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும், ஆறுகளில் மணல் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், நீர்வளத்தை பாதிக்கக்கூடிய தைல மரங்களை அகற்றி பலன்தரும் மரங்களை பயிரிட வேண்டும்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் உண்ணாவிரதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *