தஞ்சாவூர் விளார் சாலை பர்மா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சந்தோஷ் (23). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், அதற்கு பெண்ணின் தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது உறவினரான பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த ஜி. செல்வநாதன் (38) என்பவரிடம் கூறி சந்தோஷை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், தனது நண்பரான பர்மா காலனியை சேர்ந்த அமரேஷ் (23) உடன் சேர்ந்து செல்வநாதனை ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தலாம் எனக் கூறி விளார் புறவழிச்சாலையில் உள்ள தங்கும் விடுதிக்குத் பின்புறமுள்ள திடலுக்கு அழைத்துச் சென்றார். மது அருந்தியதால் மயக்க நிலைக்குச் சென்ற செல்வநாதன் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து சந்தோஷ், அமரேஷை கைது செய்தனர்.