

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன இதில் வீடுகளுக்கு சென்று குப்பை சேகரிக்க மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் மூலம் நாள்தோறும் 75 வாகனங்கள் மூலம் சுமார் 110 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு பீச் ரோடு சந்திப்பில் உள்ள உர கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது , சில வாகனங்கள் அவ்வப்போது பழுது ஏற்படுவதால் அதனை மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது அதன் அடிப்படையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநகரப் பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரிப்பதற்காக புதிதாக 17 வாகனங்கள் வாங்கப்பட்டது , மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் படி இன்று முதல் அந்த வாகனங்களில் குப்பையில் சேகரிப்பதற்காக ஒவ்வொரு பகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
