கண்டனூரில் மூடப்பட்ட காதி கதர் பொருட்கள் தயாரிப்பு ஆலையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரும் விதமாக கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சங்கர் இஆப . ஆய்வு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில், சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக, கடந்த 1988ஆம் ஆண்டு, மாவட்ட கதர் மற்றும் கிராம தொழில் துறையின் சார்பில், காதி கதர் பொருட்கள் தயாரிப்பு ஆலை தொடங்கப்பட்டது. இதனை, 26.8 ஏக்கரில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.இதில் நூற்ப்பு,நெசவு ,காகிதம், சோப்பு மற்றும் மர தட்சு போன்ற 7 வகை பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.10 ஆண்டுகள் மட்டுமே செயல்பட்டு வந்த ஆலை திடீரென மூடப்பட்டது. கட்டிடங்கள், உபகரண பொருட்கள் வீணாகிய நிலையில், தற்போது அந்த ஆலையை மீண்டும் செயல்படுத்த, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கதர், கிராம, தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சங்கர் இ.ஆ.ப. இன்று ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியும் ஆய்வில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயலர் சங்கர்விரைவில் துறை அமைச்சர் வந்து பார்வையிட்டிற்கு பின்னர், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனால் இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என தெரிவித்தார்.