• Fri. Apr 19th, 2024

இலங்கை அகதிகளை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என ஒன்றிய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது – இயக்குனர் கௌதமன் பேட்டி…

Byadmin

Aug 1, 2021

திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளருமான கெளதமன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

40 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.அவர்கள் வசிக்கும் வீடுகளும் சிறிய அளவிலேயே இருக்கிறது. இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த ஈழ தமிழர்களின் வாழ்வை முன்னேற்றும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழ தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையோ அல்லது ஒற்றை குடியுரிமையோ வழங்க வேண்டும்.ஒன்றிய அரசு மற்ற நாட்டு அகதிகளுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்குகிறது. ஆனால் ஈழ அகதிகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை.எனவே குடியுரிமை வழங்கு அவர்களின் வாழ்வை முன்னேற்ற வழி வகை செய்ய வேண்டும்.

இலங்கை அகதிகளை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என இந்திய ஒன்றிய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த வார்த்தையை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநர்,குடியரசுத்தலைவர்,மோடி ஆகியோர் நாடகம் போடுகிறார்கள்.அவர்கள் போடும் நாடகம் இரக்கமற்ற நாடகம்,அந்த நாடகத்தை கைவிட்டு ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ஒன்றிய அரசு விடுதலையை தாமதித்தால் சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி ஏழு தமிழர்களை தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டும்.கோரிக்கை அளித்தால் அதை உடனடியாக பரீசிலிக்க கூடிய அரசாக தி.மு.க அரசு உள்ளது.எனவே அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *