• Tue. Mar 25th, 2025

இரும்பு குடோவுனில் பயங்கர தீ!…

Byadmin

Aug 8, 2021

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடோன் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துகிருஷணாபுரம் பகுதியில் உள்ளது. இந்த குடோனில் வாங்கி வைத்த, பழைய பொருட்கைளை இருப்பு வைத்திருந்தார். நேற்று இரவு வழக்கம்போல குடோனை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றார்.

இந்த குடோனில் காவலாளி யாரும் இல்லாத நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் குடோனில் தீ எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தேனி மாவட்டத்தில் காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டுக்கடங்காமல் தீ எரிந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர். இதனையடுத்து கூடுதலாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 25க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்து அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.