• Thu. Apr 25th, 2024

இரண்டாம்நிலை காவலர் எழுத்துதேர்வில் வெற்றிபெற்ற பெண்களுக்கான உடல்திறன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்…

Byadmin

Aug 2, 2021

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பு காவலர் என மொத்தம் 10,906 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, உடற்தகுதி, உடல்திறன் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை பாதிப்பு காரணமாக காவலர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. தற்போது, தளர்வுடன்கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருப்பதாலும், கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் உடல்தகுதி தேர்வுகள் சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த ஜுலை 26ம்தேதி தொடங்கியது, எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்ற 2,204 ஆண்கள், 1,005 பெண்கள், 1 திருநங்கை என 3,210 பேருக்கான தகுதிதேர்வில் ஆண்களுக்கான தகுதித்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது, இதில் 1334பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர், இவர்களுக்கான நீளம்தாண்டுதல், உயரம்தாண்டுல் மற்றும் கயிறு ஏறுதல், ஓட்டம் உள்ளிட்டவைகள் வருகிற 5 – 7ம்தேதிவரை நடைபெறவுள்ளது.

இதனிடையே எழுத்துதேர்வில் தேர்ச்சிபெற்ற பெண்களுக்கான தகுதித்தேர்வு இன்று சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது, இதில் தினசரி 400பெண்கள்வீதம் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல் மற்றும் உடற் தகுதித் தேர்வில் 400மீ ஓட்டமும் நடைபெற்றது. இதனை மாநகர காவல்துறை ஆணையர் அருண் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் உடல் திறன் தேர்வு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு ஆடவரைப் போன்ற தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *