
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுசீந்திரம் இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் இந்து சமய அறநிலையத்துறை என்பதற்கு பதிலக அறநிலையத்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோலைக்கண்ணன் விடுத்துள்ள அறிக்கை
யில் கூறியிருப்பதாவது.
சசீந்திரம் இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் இந்து என்கிற வார்த்தையை அகற்றியதற்கு தென் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்து என்ற வார்த்தை வேண்டாமெனில் இந்து ஆலாயங்களின் வருமானமும் வேண்டாம் என்று சொல்ல தமிழக அரசுக்கு துணிவிருக்கா.
மீண்டும் இந்து சமய அறநிலையத்துறை என்று பெயரை சரியாக எழுத அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக பெயரை திருத்தி எழுதும் போராட்டம் நடைபெறும் என்று தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோலைக்கண்ணன் கூறியுள்ளார்.
