• Fri. Apr 19th, 2024

இந்தியாவில் விற்பனையை தொடங்கிய நோக்கியா C20 ப்ளஸ்!…

By

Aug 9, 2021

நோக்கியா நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான நோக்கியா C20 ப்ளஸ் மாடல் இன்று இந்தியாவில் அறிமுகமானது.

சீனாவில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் ஆக்டா-கோர் SoC உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது. இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் பேட்டரி தாங்கும் என சொல்லப்படுகிறது.
நோக்கியா சி 20 பிளஸ் ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது இந்தியாவில் ரூ.8,999 க்கும், இதன் 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.9,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது நோக்கியா இந்தியா வலைத்தளம், முன்னணி மொபைல் சில்லறை விற்பனையாளர்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ பாயின்ட் விற்பனை நிலையங்கள் மூலம் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன் ப்ளூ மற்றும் கிரே என கண்ணை கவரும் நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு. ரூ.4,000 மதிப்புள்ள நன்மைகள் கிடைக்கும்.

டூயல் சிம் (நானோ) ஆதரவு

  • ஆண்ட்ராய்டு 11 (கோ பதிப்பு)
    -2 டி பாண்டா கிளாஸ் பாதுகாப்பு
  • 20: 9 திரை விகிதம்
  • 400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
  • 6.51 இன்ச் எச்டி + (720×1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே
  • ஆக்டா கோர் யுனிசோக் SC9863a SoC
  • 2 ஜிபி ரேம்
  • சிங்கிள் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சார்
    5 மெகாபிக்சல் செல்ப சென்சார்
  • இரண்டும் எல்இடி ப்ளாஷ் கொண்டுள்ளது
  • எச்டிஆர்
  • ஏஐ பியூடிப்
  • 16 ஜிபி மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு விருப்பங்கள்
  • இரண்டும் மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக பிரத்யேக ஸ்லாட் மூலம் 256 ஜிபி வரை விரிவாக்கலாம்.
  • 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் வி 4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யூ.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக்
  • Accelerometer, ambient light, and proximity சென்சார்கள்
    என வியக்க வைக்கும் வசதிகள் நோக்கியா C20 ப்ளஸ் மாடல் போனில் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *