

ஆண்டிபட்டி அருகே இந்து அன்னையர் முன்னணி சார்பில் 208 மஞ்சள் குடங்களுடன் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் நீராட்டு விழா!…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொப்பையம் பட்டியில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் பெண்கள் 208 மஞ்சள் குடங்களுடன் ஊர்வலமாக வந்து ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர்.

முன்னதாக கொப்பையம் பட்டியில் உள்ள கொண்டைய சாமி கோவிலில் 208 மஞ்சள் குடங்களும் வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்து அன்னையர் முன்னணியின் மாநில பொறுப்பாளர் மாயக்கூத்தன் முன்னிலையில் 208 மஞ்சள் குடங்களுடன் கிராமத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து வழிபட்டனர் .அதனையடுத்து ஊரின் மத்தியில் எழுந்தருளியுள்ள கிடை மாரியம்மன் கோவிலுக்கு வந்து பக்தர்கள் அம்மனுக்கு தீர்த்த மஞ்சள் அபிஷேகம் செய்தனர்.இதனையடுத்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். விழா நிகழ்ச்சிகளை இன்று அன்னையர் முன்னணியின் மாவட்ட செயலாளர்கள் இந்திரா ஜி ,பூங்கொடி ,ஜெயலட்சுமி, நகர பொறுப்பாளர்கள் சுந்தரி, நாகரத்தினம், சாரதா ஆகியோர் செய்திருந்தனர். சமூக இடைவெளியுடன் ,முக கவசம் அணிந்து நடைபெற்ற இந்த வழிபாட்டில் இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் டாக்டர். எஸ்பிஎம். செல்வம் ,மாவட்ட செயற்குழு மொக்கராஜ்,நிர்வாகிகள் கனகராஜ், கருப்பையா, ஈஸ்வரன் ,மனோஜ்குமார் ஜெயபால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

