• Wed. Mar 19th, 2025

அய்யோ பாவம்! மருத்துவமனை படுக்கையில் யாஷிகா ஆனந்த்.. எப்படியிருக்கிறார் பாருங்கள்!…

By

Aug 9, 2021

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். கடந்த ஜூலை மாதம் யாஷிகா தன்னுடைய தோழியான வள்ளி செட்டி பவானி மற்றும் ஆண் நண்பர்களான அமீர், சையது ஆகியோருடன் புதுச்சேரிக்கு சென்று பார்ட்டி கொண்டாடியுள்ளார். அங்கிருந்து டாடா ஹேரியர் காரில் யாஷிகா சென்னை திரும்பியுள்ளார். அப்போது அதிகாலை ஒரு மணி அளவில் யாஷிகா அதிவேகமாக ஓட்டி வந்த கார் மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதிய கார் விபத்துக்குள்ளானது.

இதில் யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த், அமீர், சையது ஆகியோர் முதலில் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து யாஷிகா ஆனந்த சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தோழி மரணம் குறித்தும், விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றியும் யாஷிகா ஆனந்த் பதிவிட்டிருந்தது ரசிகர்களின் மனதை உருக்கும் விதமாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் எப்படி இருக்கிறார் என்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. மருத்துவமனை படுக்கையில் காலில் மிகப்பெரிய கட்டுடன், பரிதாபத்தின் உச்சமாக படுத்தியிருக்கும் யாஷிகா ஆனந்தின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வேகமாக வைரலாகி வருகிறது. யாஷிகாவின் இந்த போட்டோஸைப் பார்க்கும் ரசிகர்கள் விரைவில் நல்ல படியாக குணமடைய வேண்டுமென இறைவனை பிரார்த்திப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.