• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

பட்டியல் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு திராவிடத் தமிழர் கட்சியினர் நெல்லை ஆட்சியரிம் கோரிக்கை மனு…

Byadmin

Jul 27, 2021

திராவிடத் தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன் மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமையில் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த பட்டியல் இன அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க திரண்டு வந்தனர். அவர்கள் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது- நெல்லை மாவட்டத்தில் அருந்ததியர் இன மக்கள் வீடுகள் இல்லாமல் ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்களாக வசித்து வருகின்றனர். பாளையங்கோட்டை பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 21 இந்திராநகர், பெரியார் நகர், எம்ஜிஆர் நகர், வார்டு 25 நேச நயினார் தெரு, நம்பிக்கை நகர், மேலப்பாளையம் வார்டு எண் 30 அருந்ததியர் தெரு சமாதானபுரம் காந்திநகர் பகுதியில் வாழும் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு அரசு சார்பாக இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது. திராவிடத் தமிழர் கட்சி நிதி செயலாளர் முத்துராஜ், மாநகர செயலாளர் வேல்ராஜ், மாநகர இளைஞரணி தலைவர் விஜய். இளைஞணி தலைவர் தினேஷ், ஒண்டிவீரன் முருகேஷ், அஜித் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.