• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தேசிய கீதத்திற்கு மரியாதை செய்யும் ஆந்திர மக்கள்!….

ByIlaMurugesan

Jul 19, 2021

தேசிய உணர்வு மக்கிப் போகவில்லை என்பதற்கு உதாரணமாக தேசிய கீதத்திற்கு மரியாதை செய்யும் ஆந்திர மக்கள் பற்றிய வைரலாகும் வீடியோ குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு வருமாறு.

நாடு சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்த தேசத்திற்காக ரத்தம் சிந்திய தியாகிகளும் கூட அரிதாகவே காணப்படுகிறார்கள்.  பெற்ற சுதந்திரமும் பிறந்த பொன்னாடும்  பாதுகாக்ப்பட வேண்டும் என அந்த தியாகிகளின் உணர்வு மதிப்பிழந்து போய்விட்டதோ என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருக்கிறது.

சாதி, மதம், இனம் பிராந்திய உணர்வுகள் தலைதூக்கியுள்ள இந்த காலத்தில் தேசிய உணர்வுகள் மழுங்கி போகினவா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதற்கு விடை சொல்கிறது இந்த வீடியோ. ஓவ்வொரு இந்தியனுக்குள்ளும் உள்ள தேசப்பற்று நாட்டின் ராணுவ வீரனுக்கு இணையானதை இந்த காட்சிகள் பறைசாற்றுகிறது.

1911ம் ஆண்டு  முதன்முதலாக கல்கத்தா நகரத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் நமது தேசிய கவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய இந்த தேசிய கீதத்தை அவரின் உறவினர் சரளா தேவி சௌதுராணி பாடி அறிமுகப்படுத்தினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தனது இந்திய தேசிய ராணுவத்தின் தேசிய கீதமாக இந்த பாடலைத்தான் அறிமுகப்படுத்தினார்.

இந்தியத் தாயே மக்களின் இன் துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய் என்று தொடங்கி உனக்கு வெற்றி வெற்றி என்று முடிகிற இந்த பாடல் தேச விடுதலை போராட்டத்தின் எழுச்சி பாடலாக விளங்கிற்று.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1950ம் ஆண்டு ஜனவரி 24;ம் தேதி குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திரப்பிரசாத்தால் தேசிய கீதமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 52 வினாடிகள் பாடப்படக்கூடிய இந்த பாடல் பாடப்படும் போது ஒவ்வொரு இந்தியனும் எழுந்து மரியாதை செய்ய வேண்டும். முன்பெல்லாம் நமது தமிழ்நாட்டில் திரையரங்குகளில்  இறுதியாக இந்த பாடல் பாடப்பட்டது. ஆனால் யாரும் அதற்கான மரியாதை கொடுக்கப்படாததால் திரையரங்குகளில் இந்த பாடல் ஒளி ஒலி பரப்புவது தவிர்க்கப்பட்டது. அரசு நிகழ்ச்சிகளில் வலுக்கட்டாயமாக இந்த பாடல் திணிக்கப்பட்டாலும் நலத்திட்டம் பெற வந்த பயனாளிகள் வேறு வழியின்றி நிற்பதை பார்க்க முடிந்தது. ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஓகா என்ற சிறிய நகரத்தில் இந்த பாடல்  ஒலி பரப்பப்ட்ட போது அந்த பகுதியில் நிற்பவர்கள், நடப்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காவலர்கள், கடைக்காரர்கள், வாகன ஓட்டிகள்  என அனைவரும் ஒரு நிமிடம் கற்சிலையாக நின்ற மரியாதை செய்யும் போது நமக்குள் உள்ள தேசிய உணர்வுகள் தட்டியெழுப்புகிறது. தேச விடுதலைப் போராட்டத்தில் எழுச்சியான போராட்டங்களை நடத்திய ஒன்றுபட்ட ஆந்திரா மாநிலத்தில் இருந்த பிரிந்த தெலுங்கானா மக்கள் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியவர்கள். அதனால் தேசிய கீதத்தை உயிரென கருதி மரியாதை செலுத்தும் காட்சியை நாம் பார்க்கிறோம்.

தேசிய கீதம் தேசிய நீரோட்டத்தின் மிக உயர்ந்த இடத்தை பிடித்துள்ளதாக மகாத்மா காந்தி புகழாரம் சூட்டினார். இந்த பாடலுக்கு ஆந்திர மாநிலம் ராயல்சீமா பகுதியில் உள்ள குக்கிராமம் மதனப்பள்ளியில் இசை அமைக்கப்பட்டது. பாடலை எழுதிய தாகூரே இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் ஆந்திர மாநிலத்தில் இசையமைக்கப்பட்டது என்பதாலோ அதன் வீரியம் கருதி இன்றும் ஆந்திரா மக்கள் எழுச்சியுடன் மரியாதை செய்கிறார்களோ என்னவோ?

தேசிய கீதத்திற்கு நூற்றிபத்து வயதானாலும்

அதன் மரியாதை மங்கிவிடவில்லை என்பதற்கு இந்த காட்சிகள் சாட்சிகளாக உள்ளன. ஆந்திர மக்களுக்கு ஜெய் ஹிந்த் என்று ஒரு சல்யூட் அடிக்கத் தோன்றுகிறது. உங்களுக்கும் தோன்றும். வாழ்க பாரத மணித்திரு நாடு.