• Mon. Dec 1st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்டத்தில் ஜனசங்கம் என்ற கட்சியை முதல் முதலாக அறிமுகம் செய்தவர் எம்.ஆர்.காந்தி.பின்னாளில் ஜனசங்கம் பாஜக என மாரியபோது அந்த இயக்கத்தை குமரியில் விதைத்தவரும் எம்.ஆர்.காந்திதான்.

Byadmin

Jul 20, 2021

தமிழகத்திலே குமரி மாவட்டத்தில் ஜனசங்கம் என்ற கட்சியை முதல் முதலாக அறிமுகம் செய்தவர் எம்.ஆர்.காந்தி.பின்னாளில் ஜனசங்கம் பாஜக என மாரியபோது அந்த இயக்கத்தை குமரியில் விதைத்தவரும் எம்.ஆர்.காந்திதான்.

பொன்.இராதாகிருஷ்ணன் காங்கிரஸ் இருந்தவருக்கு,ஆர். எஸ் .எஸ் . மில் ஏற்பட்ட தொடர்பால் சாகா போன்ற டிரில் பயிற்சிகளில் பொன்னார் அதிக ஈடுபாடு காட்டத்தொடங்கினார்.
பொன்.இராதாகிருஷ்ணன் 1993_ம் ஆண்டு குமரி மாவட்டம் பாஜக தலைவராகிய பின் அவரது பயணம் பாஜகவில், மின்தூக்கி பயணமானது.அன்று முதல் எம்.ஆர்.காந்தியின் வளர்ச்சி தடைபட்டது என்றாலும் அவருக்கான ஆதரவாளர்கள், குமரியில் மட்டும் அல்ல தமிழகத்தில் இன்றும் உள்ளார்கள்.

தமிழக பாஜக வின் தலை வராக இரண்டு முறையும், மத்திய இணை அமைச்சராக இரண்டு முறையும் பதவி வகித்தார்.

நாகர்கோவில் மக்களவை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாகர்கோவில் நாடாளுமன்றம், கன்னியாகுமரி மக்களவை தேர்தல்களில் எட்டு முறை போட்டி இட்டு ஆறு முறை தோல்வி. இரடண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றார்.இதை போன்றே நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் ஒரு முறை போட்டியிட்டவர் அதிலும் தோல்வியை சந்தித்தார்.

தமிழக பாஜக வின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட நிலையில்.அதனை வர வேற்று குமரி மாவட்டத்தில் பல இடங்களில் பஜகவினர், சுவர் ஒட்டிகள் ஒட்டப்பட்டுள்ள நிலையில்.அந்த சுவர் ஓட்டிகளின் குமரி பாஜக வினர் திட்டம் இட்டே பொன்.இராதாகிருஷ்ணன் படத்தை தவிர்த்து வருவதும்.அதே நேரத்தில் எம்.ஆர். காந்தி சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் அவரது புகைப்படத்தை எல்லா சுவர் ஒட்டிகளிலும் காண முடிவது.குமரியில் அவரது சொந்த கட்சியினர் மத்தியில் பொன்னார் செல் வாக்கு சரிவதையே காட்டுகிறது என்பதும் பாஜகவினர் மத்தியில் ஒரு ஆச்சரியம் கலந்த விவாதமாக உள்ளது.