• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

உரிமம் பெறாத துப்பாக்கிகள் பறிமுதல் போலீசார் அதிரடி ஆய்வு!…

By

Aug 21, 2021

சென்னை தி.நகர் பகுதியில் முறையான உரிமம் பெறாமல் வைத்திருந்த 150க்கும் மேற்ப்பட்ட துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தி.நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ், சினிமா சூட்டிங்கிற்கு தேவையான பொருட்கள் மற்றும் சினிமாவுக்கு பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கிகளை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

இவ்வாறு துப்பாக்கிகளை வாடகைக்கு விட வேண்டும் என்றால் அதற்கு முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும் .

ஆனால், அவர் உரிமம் பெறாமல் டம்மி துப்பாக்கிகளை வாடகைக்கு விட்டு வருவதாக, தி.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், செல்வராஜ் முறையான உரிமம் இல்லாமல் டம்மி துப்பாக்கிகளை வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்து 150க்கும் மேற்பட்ட டம்மி துப்பாக்கிகளை பறிமுதல் செய்து உஅவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.