பழனி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு பெரியப்பா நகரில் உள்ளது. இந்த குப்பை கிடங்குக்கு அருகில் பழனி குபேரபட்டினத்தை சார்ந்த நவினிதன்( 25) கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இளைஞர் இறந்து கிடப்பது குறித்து பொதுமக்கள் பழனி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட இடத்தில் கொலையாளிகள் பயன்படுத்திய கத்தியை விட்டு சென்றுள்ளனர். நவனிதனை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். நகராட்சி குப்பை கிடங்கு அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
