• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குடிநீர் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் மண்டபம் தனியார் குடியிருப்பில் தினேஷ் வசித்து வருகிறார். இவர் மாசாணி அம்மன் கோவில் தேங்காய் பழம் விற்கும் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் 15 குடியிருப்புகள் உள்ளது.

இதில் ஒரு வீட்டில் தினேஷின் அக்கா பரமேஸ்வரி வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் குழாயில் தண்ணீர் பிடிப்பது பரமேஸ்வரிக்கும், அதோ காம்பவுண்டில் வசித்து வரும் அகல்யாவுக்கும் வாய் தகராறில் ஏற்பட்டுள்ளது. இதில் அகல்யாவின் அம்மா பானுமதி தனது அக்காவை தட்டியதால், அவருக்கும் தினேஷ்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அகல்யா தனது கணவர் தமிழ்செல்வனிடம் கூறியதன் பேரில் அவரது உறவினர் ராகவேந்திரன் மற்றும் சிலர் தினேஷ் கடுமையாக தாக்கியுள்ளனர். தினேஷ் மயக்கமடைந்த நிலையில் மூக்கில் ரத்தம் வழிய அக்கம் பக்கத்தினர் தினேஷ் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தினேஷ் உயிரிழந்தார்!

இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு தினேஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது! இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வரத்தினம் உத்தரவின்பேரில் வால்பாறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் ஆய்வாளர் ஹரிஹரன் மற்றும் உதவி ஆய்வாளர் சின்ன காமன் இச்சம்பவம் குறித்து 7 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலர் தலைமறைவாக உள்ளதால் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.