• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தி.மு.க முகவர் சந்திப்பு மாநாடு – மு க ஸ்டாலின் பங்கேற்பு…

BySeenu

Feb 27, 2026

2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒட்டி தமிழகத்தில் மண்டல அளவிலான பாக முகர்வர்கள் மாநாட்டை தி.மு.க நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு இன்று கோவை – கொச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்றது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்தின் தொடக்கத்தில் நிர்வாகிகளை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த அவர், அவர்களின் உற்சாக வரவேற்பை பாராட்டினார்.

கோவை மாவட்டம் திமுக ஆட்சிக்காலத்தில் முக்கிய பங்காற்றி வருவதாகவும், சமூக நீதி மற்றும் மொழி உரிமைக்கான போராட்டங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மண்ணாகவும் இருப்பதாக குறிப்பிட்டார். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களில் பொள்ளாச்சி பகுதி முக்கிய இடம் பெற்றதையும் அவர் நினைவூட்டினார். வரவிருக்கும் தேர்தல்களில் கோவை மாவட்டம் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து பேசிய அவர், ஒவ்வொரு நிர்வாகியும் மக்களை குறைந்தபட்சம் ஐந்து முறை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்றார். சமூக வலைதளங்கள் இருந்தாலும், வீடு தோறும் சென்று வாக்கு கேட்பதே பலன் அளிக்கும் என்றும் கூறினார். ஒவ்வொருவரும் 40 முதல் 50 வாக்குகள் வரை உறுதி செய்ய இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வாக்காளர்கள் வாக்களிக்கும் வரை ஓய்வு எடுக்கக் கூடாது என்றும், மக்களை மரியாதையுடன் அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.