• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குளித்தலையில் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர் கைது..,

ByAnandakumar

May 8, 2025

குளித்தலையில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சொரிதல் விழாவின் போது
கத்தியால் குத்தப்பட்டு இறந்த இளைஞரின் படத்தை ஸ்டேட்டஸ் ஆக வைத்து நீ சிந்திய
ரத்தம் வீண் போகாது பழிக்கு பழி வாங்குவோம் எனசமூக வலைதளங்களில் பகிர்ந்த சத்தீஸ்வரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் நடனம் ஆடிய போது கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ரவி என்பவரது மகன் ஷியாம் சுந்தர் வயது 17. என்ற இளைஞரை கத்தியால் குத்தி படுகொலை செய்த வழக்கில் 17 வயது இளைஞர் உட்பட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் பரபரப்பு அடங்குவதற்குள் இறந்த இளைஞர் ஷியாம் சுந்தர் படத்தை ஸ்டேட்டஸ் ஆக வைத்து அதில் ” நீ சிந்திய ரத்தம் வீண் போகாது பழிக்கு பழி வாங்குவோம்” என சமூக வலைதளங்களில் ஆகியவற்றில் பகிர்ந்த குளித்தலை பெரிய ஆண்டார் தெருவை சேர்ந்த பிரபு என்பவரது மகன் சத்தீஸ்வரன் வயது 22. என்பவர் பகிர்ந்திருந்தார்.

இதனை அடுத்து குளித்தலை போலீசார் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்று சத்தீஸ்வரனை கைது செய்து குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.