• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே விபத்தில் இளம் பெண் பலி..!

ByS.Ariyanayagam

Jun 30, 2026

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளம் பெண் பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே அச்சனம்பட்டியை சேர்ந்த கிரிஜா(25) இவர் தனது இருசக்கர வாகனத்தில் மொங்குபித்தன்பட்டி மதுரை வீரன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட கிரிஜா கீழே விழுந்து படுகாயம் அடைந்தார் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக எரியோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவர் உயிரிழந்தார்.

மேற்படி சம்பவம் குறித்து எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.