• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் திமுக மாணவர் அணியினர் கைது

ByS.Ariyanayagam

Jun 29, 2026

திண்டுக்கல்லில் தவெக அமைச்சரை கண்டித்து, திமுக திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் தபால் நிலையம் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தினேஷ் தலைமையேற்றனர். மாநகர செயலாளர் திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் பிலால் உசேன், நாகராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரவி, பகுதிச் செயலாளர்கள் சந்தோஷ் முத்து ஜானகிராமன், சூசைராபர்ட், ராஜேந்திரகுமார், சந்திரசேகர் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஜெயராமன் மற்றும் கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.