
தமிழ்நாடு தொழில் நுட்ப மாநில மன்றத்தின் சார்பாக விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்காக இளம் மாணவ விஞ்ஞானி திட்டம் 2025 ஜூன் 2 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான தொடக்க விழா விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளிஸ்வரி கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் முனைவர் பாலமுருகன் தலைமை வைத்தார் துணை முதல்வர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். கல்லூரியின் தொழில்நுட்பவியல் தாவரவியல் துறை தலைவர் மற்றும் இளம் மாணவ விஞ்ஞானி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சுஜாதா வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உயரிய தொழில் நுட்பவியல் துறை தலைவர் பேராசிரியர் சுதாகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். புதிய விஞ்ஞானிகள் உருவாக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் பற்றியும் நீரின் முக்கியத்துவம் மற்றும் வயது முதிர்ச்சியை தடுக்கும் தற்போதைய ஆராய்ச்சிகள் பற்றி விளக்கி கூறினார். கணிதவியல் துறை தலைவர் லலிதாம்பிகை நன்றி கூறினார். பயிற்சி முகாமில் ராமநாதபுரம், விருதுநகர், மாவட்டத்தை சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட மாணவ ,மாணவிகள், கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.
