குஜராத்தை சேர்ந்த இளம் மாடலிங் அழகி அஞ்சலி வர்மோரா அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்த அவரது உடலை போலீசார் மீட்டுள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த இளம் மாடலிங் அழகி அஞ்சலி வர்மோரா (23). இவர் தனது சூரத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தற்கொலையாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
அஞ்சலி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, அஞ்சலியின் தொலைபேசி அழைப்புப் பதிவுகளை காவல்துறையினர் விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அஞ்சலியின் உறவினர்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனைக்காக உடல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கூடுதல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.