• Mon. Apr 29th, 2024

பிப்.1ஆம் தேதிக்குள் மஞ்சள் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்..!

Byவிஷா

Jan 5, 2024

நெகிழியின் தடையை செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு வழங்கப்படும் மஞ்சப்பை விருது பெற பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து சொல்லும் விதமாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத் துறை அமைச்சர் சட்டப் பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து சொல்லும் விதமாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத் துறை அமைச்சர் சட்டப் பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த விருது பெறுவோருக்கு முதல் பரிசாக 10 லட்சம், இரண்டாம் பரிசாக 5 லட்சம், மூன்றாம் பரிசாக மூன்று லட்சம் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் விருதுகள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் http//madurainic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2023-2024 ஆண்டு விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *