• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

குரூப் -5 தேர்வு இன்று முதல் செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்

ByA.Tamilselvan

Aug 23, 2022

குரூப்-5ஏ தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நிரப்பி வருகிறது.அந்த வகையில், தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப்-5ஏ தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.அதன்படி, ‘இன்று (ஆக.23-ம் தேதி) முதல் வரும் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், செப்டம்பர் மாதம் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். டிசம்பர் மாதம் 18-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும்’ என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.