• Thu. Apr 25th, 2024

கைதிகளுக்கு யோகா ,தியானபயிற்சி

ByA.Tamilselvan

Jun 28, 2022

கைதிகள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 5 நாட்கள் யோகா மற்றும் தியான பயிற்சி மத்திய சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு
சர்வதேச அளவில் யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மதுரை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த பயிற்சியின்போது ஆண் மற்றும் பெண்கள் தனி சிறையிலும் உள்ள தண்டனை சிறைவாசிகள் மற்றும் விசாரணை சிறைக்கைதிகளுக்கு யோகா பயிற்சியும், மன அமைதிக்கான தியான பயிற்சி மற்றும் தனது உடல் நிலையை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பயிற்சிகள் அனுபவம் வாய்ந்தவர்களால் கற்பிக்கப்பட்டது.


இந்த பயிற்சி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், முதல் நாளான இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை யோகா பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் மற்றும் கண்காணிப்பாளர் மற்றும் யோகா குழுவினர் இணைந்து யோகா தியான பயிற்சியை நடத்தினர்.
இந்த தியானம் மற்றும் யோகா பயிற்சியின் மூலம் கைதிகள் விடுதலை பெற்ற பின்னரும் குற்றசம்பவங்களில் இருந்து விலகி நல்வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகை செய்திட உதவும் என்று சிறைத்துறை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *