தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று தனியார் கராத்தே நிறுவனம் நடத்திய பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சியில் ஒரத்தநாடு முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது ஆசிப் சகுபநிஷத் இவர்களின் மகள் ஆஷிபா 22 என்பவர் பல்லால் காரை கட்டி எடுத்து சாதனை படைத்தார்.

மேலும் வேதாஸ் என்ற இளைஞரும் கையால் காரை இழுத்து சாதனை படைத்தார் அதேபோன்று கைகளில் அதிக எடை கொண்ட புல்லட் இருசக்கர வாகனத்தை ஆரோவில் விஸ்வாஸ் ஆகியோர் கையில் ஏற்றி சாதனை படைத்தனர் இந்நிகழ்ச்சியில் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வெற்றிவேந்தன் திமுக மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா திமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் நிகழ்ச்சி தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய பாராட்டினார்கள்.