கன்னட நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் வசூல் சூறாவளியாக மாறி 1000 கோடி வசூலை அள்ளி கன்னட திரையுலகத்திற்கே மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
கர்நாடகாவில் சாதாரண பஸ் டிரைவரின் மகன் தான் நடிகர் யஷ். தற்பொழுது நடிகர் யஷ்ஷை தெரியாத உலக சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. தென்னிந்தியாவில் 1000 கோடி கிளப்பில் இணைந்த 3வது படம் என்கிற பெருமையை கேஜிஎஃப் 2 திரைப்படம் பெற்றுள்ளது. இந்தியளவில் 4வது படம் என்றும் கூறப்படுகிறது. தங்கல், பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் படங்களை தொடர்ந்து இந்த இமாலய சாதனையை கேஜிஎஃப் 2 திரைப்படம் படைத்துள்ளது.

இந்நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்தை தனது மனைவி ராதிகா பண்டித் மற்றும் தனது டீம் உடன் இணைந்து திடீரென இன்று சந்தித்துள்ளார் நடிகர் யஷ். இந்த சந்திப்பு குறித்தும் சந்திப்பு நடந்த போது எடுத்த புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
சம்மர் விடுமுறையை தனது மனைவியுடன் கொண்டாட கோவா வந்துள்ள யஷ்ஷை சந்திக்க முதல்வர் விருப்பம் தெரிவித்த பேரில் இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என்றும், இல்லையென்றால், அடுத்த படத்திற்கு கோவாவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு நடத்த கோரிக்கை வைத்துள்ளாரா என ஏகப்பட்ட கேள்விகளும், யூகங்களும் கிளம்பி வருகின்றன..
