• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ.4.50 லட்சம் நன்கொடை அளித்த யாசகர்கள்..!

Byவிஷா

Dec 29, 2023

அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக, பிரயாக்ராஜ் மற்றும் காசியில் இருந்து 300க்கும் மேற்பட்ட யாசகர்கள் (பிச்சைக்காரர்கள்) ரூ.4.50 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்காக நன்கொடை திரட்டும் பிரச்சாரத்தில் பிரயாக்ராஜ் மற்றும் காசியில் இருந்து 300 க்கும் மேற்பட்ட யாசகர்களும் (பிச்சைக்காரர்கள்) பங்கேற்றனர். பிரமாண்ட ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அயோத்தி தயாராகி வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் நிதிக்கு உலகம் முழுவதும் உள்ள பக்தர்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. அந்த வகையில் காசி மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த யாசகர்கள் கோவில் கட்டுவதற்காக நன்கொடை அளித்துள்ளனர். பல யாசகர்கள் (பிச்சைக்காரர்கள்) இணைந்து குழுவாக ரூ 4.5 லட்சத்தை நன்கொடையாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீ ராம் மந்திர் தீர்த்த அறக்கட்டளைக்காக ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் ஏற்பாடு செய்த நிதி பிரச்சாரத்தில் பிரயாக்ராஜ் மற்றும் காசியில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் பங்கேற்றனர். இவர்களின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக கும்பாபிஷேக விழாவிற்கும் இவர்கள் அழைக்கப்பட உள்ளனர்.
சமீபத்திய கணக்கீடின்படி அறக்கட்டளைக்கு மாதந்தோறும் 1 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்து வந்தது. அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை தனது டெல்லி வங்கிக் கணக்கில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்தும் நன்கொடைகளைப் பெறத் தொடங்கியது. தொடக்கமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஒரு பக்தர் 11,000 ரூபாயும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மற்றொருவர் 21,000 ரூபாயும் வழங்கினர்.
இந்த ஆண்டு பிப்ரவரி வரை, நாடு முழுவதிலும் இருந்து நன்கொடைகள் மூலம் அயோத்தியில் உள்ள அறக்கட்டளையின் மூன்று வங்கிக் கணக்குகளிலும் ரூ.3500 கோடி இருப்பு உள்ளதாக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகிறார்.