• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ரைட்டர் பட இயக்குனர் பிராங்களின் இயக்கும் படத்தை தயாரிக்கும் மாஸ்டர் தயாரிப்பாளர்

தன்னிடம் பணிபுரியும் உதவி இயக்குனர்களுக்கு புதிய படங்களை இயக்க வாய்ப்பு கிடைப்பதில் இங்கு சிரமம் இருப்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் கூறியிருந்தார் இந்த நிலையில் ரைட்டர் படத்தின் இயக்குனர் பிராங்களின் ஜேக்கப் தங்களது நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவிருப்பதாகமாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனர் லலித் குமார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்தப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் விக்ரம் நடிக்கும் ‘மகான்’ படத்தை தயாரித்துள்ளது. இப்படம் வரும் ஜனவரி மாதம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘ரைட்டர்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் நடித்து வரும் சமுத்திரக்கனி இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள ரைட்டர் டிசம்பர் 24 அன்று வெளியானது.