புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அடப்பன்வயல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் இன்று ஏராளமான முருக பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

இதில் தண்டாயுதபாணி முருகனுக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாதாரனை கான்பிக்கப்பட்டது. அதன் பிறகு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்ட முருகனுக்கு பஞ்சமுக தீபாதாரனை காண்பிக்கபட்டது. இதில் புதுக்கோட்டையை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.