• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் உலக தண்ணீர் தின விழா

ByI.Sekar

Mar 23, 2024

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் உலக தண்ணீர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். ஆலோசகர் தமயந்தி முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்று பேசினார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தண்ணீரின் அவசியத்தையும் ,தண்ணீரை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும், தண்ணீர் சேமிப்பின் தன்மை பற்றியும் பள்ளி நிர்வாகி மாத்யூ ஜோயல் விளக்கிப் பேசினார்.

பள்ளி மாணவ ,மாணவிகள் தண்ணீரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. குடி தண்ணீர் என்று மட்டும் இல்லாமல் தண்ணீர் எங்கெல்லாம் இருக்கிறதோ அவற்றை மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கடமை என்று எடுத்துக் கூறப்பட்டது.